தூத்துக்குடி அருகே அந்தோணியார்புரம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தை நடத்துவதற்காக பதனீர் விற்று அந்த கிராம மக்கள் காசு சேர்க்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சேர்த்து அந்த பணத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்.
அந்தோணியார்புரம்
தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 6, 7, 8–ம் வகுப்புகள் சுயநிதி வகுப்புகளாக நடைபெற்று வருகின்றன. 6 முதல் 8–ம் வகுப்பு வரை 76 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த பள்ளிக்கூடத்தின் பராமரிப்பு மற்றும் 6 முதல் 8–ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான சம்பளம், பள்ளிக்கூட நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்கு அந்த ஊரில் இருந்துதான் பணம் வழங்கப்படுகிறது. இதற்காக ஊரில் தனியாக கல்வி நிதி என்ற பெயரில் பணம் சேர்க்கிறார்கள். அதாவது ஆண்டுதோறும் பதநீர் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை கல்வி நிதியாக அந்தோணியார்புரம் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ.2 லட்சம்
அந்தோணியார்புரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை சுற்றி சுமார் 2 ஆயிரம் பனைகள் உள்ளன. அந்த பனைகளில் இருந்து பெறப்படும் பதநீரை ஊர்மக்கள் மொத்தமாக விலைக்கு வாங்கி விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் 4 மாதங்களில் சுமார் ரூ.2 லட்சம் வரை வருமானம் பெறுகின்றனர். இந்த பணத்தை கல்வி நிதியாக டெபாசிட் செய்து வைக்கின்றனர். அதன்மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
பதநீரை விற்பனை செய்து பள்ளிக்கூடத்தை பராமரிக்கும் அந்தோணியார்புரம் ஊர் மக்களின் கல்விச்சேவை குறித்து ஊர் தலைவர் மைக்கேல் ஜெபமாலை, செயலாளர் அந்தோணி தஸ்நேவிஸ் ஆகியோர் கூறியதாவது:–
மொத்தமாக வாங்குவோம்
எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூட பராமரிப்பு பணிக்கு பதநீர் விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தை பயன்படுத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தை சுற்றி உள்ள பனைமரங்களில் இருந்து எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பதநீர் இறக்குகின்றனர். அவர்களிடம் இருந்து ஒருநாளுக்கு 250 படி பதநீர் வரை மொத்தமாக விலைக்கு வாங்குவோம். அதனை அந்தோணியார்புரம் ஊரின் முன்பு மெயின் ரோட்டில் ஒரு கடை அமைத்து விற்பனை செய்கிறோம். இதற்காக தனியாக ஒரு ஆளை நியமித்து உள்ளோம். இது தவிர தூத்துக்குடிக்கும் பதநீரை கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.
ஒரு படி பதநீரை ரூ.70 வரை விற்பனை செய்வோம். மே மாதத்தில் அதிக அளவிலும், மற்ற மாதங்களில் சற்று குறைவாகவும் பதநீர் விற்பனையாகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பதநீர் கிடைக்கும். இந்த 4 மாதங்களில், மொத்தம் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. நாங்கள் வாங்கிய பதநீர் விற்பனை ஆகாமல் இருந்தால், அந்த பதநீரை காய்ச்சி கருப்பு கட்டியாக மாற்றி விற்பனை செய்வோம். சுத்தமான கருப்புக்கட்டி என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
அரசு ஏற்க வேண்டும்
பதநீர் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை மொத்தமாக கல்வி நிதிக்கான வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடுவோம். அந்த நிதியை கொண்டு பள்ளிக்கூட பராமரிப்பு பணிகள், 6, 7, 8–ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஊரின் வேறு எந்த தேவைக்கும் இந்த நிதியை பயன்படுத்துவது இல்லை. அந்த பள்ளிக்கூடத்தை அரசு முழுமையாக ஏற்று நடத்தினால் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தற்போது எங்கள் ஊர் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களில் இருந்தும் மாணவ–மாணவிகள் வந்து படிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்த அந்தோணியார்புரம் கிராம மக்கள் செய்துவரும் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.