சாவில் சந்தேகம் இருப்பதாக தங்கை புகார் கூறியதால் 5 மாதத்திற்கு பிறகு த.மா.கா. பிரமுகரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் குளித்தலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாவில் சந்தேகம்
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 37). தொழிலதிபர். இவருடைய மனைவி மீனா. சூர்யா(11), நரேன்(10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வினோத்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி ஊட்டியில் உள்ள மாமனார் வீட்டில் இருந்தபோது வினோத்குமார் இறந்துவிட்டார்.
இதையடுத்து வினோத்குமாரின் உடல் குளித்தலைக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி புதைக்கப்பட்டது. இந்த நிலையில் வினோத்குமாரின் தங்கை சங்கரி தனது அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
உடல் நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எனது அண்ணன், உடல் ஆரோக்கியத்தோடு மருத்துவமனையில் இருந்து ஊட்டி அருகே ஆடோசோலையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
சொத்தை அபகரிக்க திட்டம்
எனது அண்ணன் மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்கவேண்டும் என்ற நோக்குடன் சிலர் எனது அண்ணன் வினோத்குமாரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
மேலும் எனக்கு பாத்தியப்பட்ட பலகோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க என்னையும், எனது தாயார் தங்கரெத்தினத்தையும் கூலிப்படை மூலம் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். எனவே எனக்கும், எனது தாயாரின் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். எனது அண்ணனின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
உடல் தோண்டி எடுக்கப்பட்டது
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து வினோத்குமாரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவுள்ளதாக கரூர் மாவட்ட கலெக்டர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து வினோத்குமார் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தென்னந்தோப்பில் புதைக்கப்பட்டு இருந்த வினோத்குமாரின் உடலை தோண்டி எடுக்கும் பணி நேற்று நடந்தது. கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், ஊட்டி ஊரக வட்ட ஆய்வாளர் ஜெயபாலன் மற்றும் குளித்தலை போலீசார் வினோத்குமாரின் தங்கை சங்கரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வினோத்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பரபரப்பு
தோண்டி எடுக்கப்பட்ட உடலில் பல்வேறு உறுப்புகள் மற்றும் எலும்புகளை குளித்தலை அரசு மருத்துவர்கள் செந்தில்குமார், பாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் எடுத்து பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வினோத்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது அந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில நபர்களை தவிர மற்ற யாரையும் அருகில் போலீசார் அனுமதிக்கவில்லை.
வினோத்குமாரின் மனைவி மீனா, மாமனார் பழனிச்சாமி ஆகியோர் சிறிது தூரத்தில் இருந்தபடி வினோத்குமார் உடல் பரிசோதனை செய்யப்படுவதை பார்வையிட்டனர். 5 மாதத்திற்கு பிறகு த.மா.கா. பிரமுகர் வினோத்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.