Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

கணவருக்கு தோஷம் இருப்பதால், பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி 160 பவுன் நகை மோசடி


கணவருக்கு தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி 160 பவுன் நகை மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கணவருக்கு தோஷம்

திருநின்றவூர் லட்சுமிபுரம் 3-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் சுரேந்திரன். இவர், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அஸ்வினி(வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

அஸ்வினியுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நிகழ்ச்சியில் அஸ்வினியை சந்தித்து பேசினார்.

அப்போது விஸ்வநாதன், அஸ்வினியிடம் “உனது கணவருக்கு தோஷம் உள்ளது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உனது தங்க நகைகளை வைத்து பரிகாரம் செய்தால் சரியாகி விடும்” என்றார்.

160 பவுன் நகை மோசடி

அதற்கு அஸ்வினி சம்மதம் தெரிவித்தார். உடனே விஸ்வநாதன் தனது நண்பர்களான கிஷோர் அகமது, அருண் ஆகியோரை அஸ்வினியிடம் அறிமுகம் செய்து வைத்தார். கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அஸ்வினி, அன்று முதல் அவ்வப்போது தனது நகைகளை விஸ்வநாதனிடம் கொடுத்து வந்தார்.

இவ்வாறு அஸ்வினியிடம் இருந்து மொத்தம் 160 பவுன் நகைகளை விஸ்வநாதன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஸ்வநாதன் பரிகாரம் எதுவும் செய்வதாக தெரியவில்லை.

தலைமறைவு

இதனால் சந்தேகம் அடைந்த அஸ்வினி, தான் கொடுத்த நகைகளை திரும்ப தரும்படி விஸ்வநாதனிடம் கேட்டார். இதையடுத்து விஸ்வநாதன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி கண்ணம்மா வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அருண் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்.

மேலும் தலைமறைவாக உள்ள விஸ்வநாதன் மற்றும் கிஷோர் அகமது ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.