அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஆர்லண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 53 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை ஆர்லண்டோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஆர்லண்டோ நகரில் உள்ள பிரபலமான கேளிக்கை விடுதியில், நூறுக்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் இரவு விடுதிக்குள் நுழைந்த காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நபர் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த உமர் மத்தீன் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஃபுளோரிடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.