Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

வீடியோ: ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயற்சி


ராஜஸ்தானில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்தவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற நபரின் அடையாளம் சி.சி.டி.வி. கேமரா பதிவானது. அதை வைத்து போலீசார் அவரை கைதானார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1-ம் தேதி நபர் ஒருவர் ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த கொள்ளையன் ஒருவன் அந்த நபர் பணம் எடுக்கும் வரை காத்திருந்து, ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்தவர் பணத்தை எண்ணும் போது, அந்த கொள்ளையன் அந்த நபரை கத்தியால் குத்தி பணத்தை பறிக்க முயற்சித்துள்ளான்.

மூன்று முறை கொள்ளையன் கத்தியால் குத்திய நிலையில், சுதாரித்துக் கொண்ட அந்த நபர், கொள்ளையனை பிடிக்க முயற்சிக்கையில் அவன் தப்பியோடினான். இக்காட்சிகள் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனிடையே, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். நவீன் பிரிஹர் எனும் அந்த நபர், அவசர பணத்தேவை காரணமாக வேறு வழியின்றி இத்தகைய செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கொள்ளையனின் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.