ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் முடிவடைந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் ஸ்கோர் 189-ஐ தாண்டவில்லை. இதற்கு காரணம் கயானா புரோவிடன்ஸ் மைதான ஆடுகளம் மெதுவாகவும், பந்து அதிக அளவில் திரும்பியதாலும் பேட்ஸ்மேன்களால் அதிக ரன்கள் குவிக்கவில்லை.
அடுத்து வரும் மூன்று போட்டிகள் செயின்ட் கி்ட்ஸ், பாஸ்ஸேடேர் வார்னர் பார்க்கில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானம் அளவில் சிறியது என்பதால் அதிக அளவில் ரன்குவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தென்ஆப்பிரிக்கா அணியின் ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளர் ஷாம்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷாம்சி கூறுகையில் ‘‘கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் விளையாட்டு என்று சொல்கிறார்கள். நாங்கள் நன்றாக பந்து வீசுகிறோம் என்ற உணர்வதற்காக தற்போது அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளனர் (நகைச்சுவையாக கூறினார்). சிறந்த ஸ்பின்னர்கள் டர்னிங் ஆடுகளத்தில் பெரிய மைதான உதவியோடு சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், சின்ன மைதானம் கொடுக்கும்போது மேலும் சிறந்த முறையில் பந்து வீச்சை உருவாக்கி மேலோங்க வேண்டும். இதை ஆடுகளத்தில் சரியாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கரீபியன் மண்ணில் ஆடுகளங்கள் டர்ன் ஆகும் வகையில் இருக்கும். கடந்த வருடம் நான் இங்கு விளையாடும்போது, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது என்பது எனக்கு தெரியும். கரீபியன் மண்ணில் எங்கு சென்றாலும், சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்’’ என்றார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஷாம்சி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியானர். தற்போது வரை முடிந்தது 3 போட்டிகளில் 49 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. இதில் 31 விக்கெட்டுக்கள் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.