Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

ஆத்தூர் அருகே பள்ளி வேன் தலைகுப்புற கவிழ்ந்தது; ஆசிரியைகள் உள்பட 15 பேர் படுகாயம்


ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 ஆசிரியைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

பள்ளி வேன் கவிழ்ந்தது
ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் ஆத்தூர் பகுதியில் இருந்து ஆசிரியைகளை அழைத்துக்கொண்டு பள்ளி வேன் நடுவலூர் நோக்கி சென்றது. வேனை ஆத்தூர் அப்பமசமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 31) ஓட்டி வந்தார்.

மேலும் இந்த வேனில் பள்ளி விடுதிக்கு தேவையான காய்கள் ஆத்தூர் உழவர் சந்தையில் வாங்கி கொண்டு வரப்பட்டது. வேன் ஆத்தூர் அருகே மஞ்சினி செல்லும் வழியில் வால்கரடு என்ற இடத்தில் சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

அப்போது வேனில் பயணம் செய்த அதே பள்ளி ஆசிரியைகள் புளோரா சுகுணா (44), பத்மாபிரியா (27), சங்கீதா(33), மணிமேகலை(24), இன்னொரு சங்கீதா (32), பிரமிளா தேவி(37), பிரியங்கா (24), மரியா ஜெனீபர்(31), சுதா (24), காயத்திரி(27), இளமதி (29) ஆகிய 11 பேரும், டிரைவர்கள் பாலகிருஷ்ணன் (31), கார்த்திக் (27), அந்தோணிராஜ் (32), கிளீனர் ராமகோவிந்தன் (26) ஆகியோரும் என மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு மற்றும் போலீசார் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.