ஓடும் ரெயிலில் கட்டுமான அதிபரின் துப்பாக்கியை திருடிய 2 மைனர் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கி திருட்டு
நவிமும்பையை சேர்ந்த கட்டுமான அதிபர் வன்வீர் ராஜ்புட்(வயது49). இவர் சம்பவத்தன்று மும்பை நோக்கி பூஜ்- பாந்திரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் ரெயிலில் அயர்ந்து தூங்கிய அவர் அதிகாலை 5.30 மணிக்கு கண் விழித்தார்.
அப்போது தனது இடுப்பு பெல்ட்டில் மாட்டியிருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு துப்பாக்கி, 4 தோட்டா மற்றும் ரூ.16 ஆயிரம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். கட்டுமான அதிபரின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் துப்பாக்கியை அபேஸ் செய்து சென்ற மர்ம ஆசாமியை தேடிவந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் ஓடும் ரெயிலில் கட்டுமான அதிபரிடம் துப்பாக்கியை திருடிய 17 வயது மைனர் வாலிபர்கள் 2 பேர் சம்பவம் குறித்து தங்களது பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கூறினர். மேலும் அவர்கள் துப்பாக்கியை பயத்தில் பாந்திரா ரெயில்முனையம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நபர் பாந்திரா ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட மைனர் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
மைனர் வாலிபர்கள் ரெயில்வே போலீசாரிடம் கூறிய தகவலின் அடிப்படையில் சாக்கடை கால்வாய் பகுதியில் துப்பாக்கியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.