Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

உலகில் முதல் முறையாக ரைன்ஃபுரூப் வசதி: நவீனமாகும் பெங்களூரு மைதானம்


பெங்களூரு எம்.சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சப்-ஏர் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தி, மைதானம் முழுவதும் ரூ. 4 கோடி செலவில்  ரைன்ஃபுரூப் வசதி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்தால், மழை பெய்யும்போது மைதானத்தில் நிரம்பும் தண்ணீரை,  மைதானத்துக்கு அடியில் பதித்துள்ள பைப்புகள் மூலம் இழுத்து கால்வாயி்ல் விடப்படும். நீர் இழுத்தபின் அதே பைப் வழியாக சப்-ஏர் சிஸ்டம் மூலம் காற்று  சப்ளை செய்யப்படும்.

சில நிமிடங்கள் மைதானத்தில் உள்ள ஈரப்பதம் முழுமையாக உலர்ந்து 30 நிமிடங்களில் மீண்டும் விளையாடும் வகையி்ல் நல்ல தட்ப-வெப்ப நிலைக்கு  வந்துவிடும். உலகிலேயே இங்கு தான் முதல் முறையாக இந்த வசதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.