ரெயில் நிலையத்தில் இப்படி ஒரு கொலை சம்பவம் இதுவரை நடந்தது இல்லை என்றும், சுவாதியை கொலை செய்த குற்றவாளியை நிச்சயம் பிடித்துவிடுவோம் என்றும் ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. தெரிவித்தார்.
கொலையாளி புகைப்படம்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் நேற்று பார்வையிட்டு இந்த கொலை தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுவாதி கொலை ஏதோ 4 பேரோ அல்லது நிறைய பேர் சேர்ந்தோ செய்தது இல்லை. ஒரே ஒருவன் தான் இந்த கொலையை செய்திருக்கிறான். அவன் இந்த பெண்ணிடம் வந்து பேசுகிறான். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து வெட்டுகிறான். வாள் வீச தெரிந்தவன் போல வெட்டி இருக்கிறான்.
இது திட்டமிட்ட கொலை தான். வெட்ட வந்தவன் கூலிக்காக கொலை செய்தானா? அல்லது சுவாதியை ஒருதலையாக காதலித்தானா? என்பது தெரியவில்லை. அவனுடைய புகைப்படம் கிடைத்து இருக்கிறது. நிச்சயமாக அவனை பிடித்துவிடுவோம்.
நடந்தது இல்லை
பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் எப்போதும் தீவிரமாக செய்து வருகிறோம். பயணிகள் அதிகம் கூடும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய ரெயில் நிலையங்களில் எப்போதும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.
இந்த ரெயில் நிலையம் பயணிகள் அவ்வப்போது வந்து போகும் இடம் தான். இப்படி ஒரு கொலை சம்பவம் இங்கு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை தாண்டி தான் இதுபோல் கொலைகள் நடக்கும்.
மற்றபடி, ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் நடக்கும். 2014-ல் ரெயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. அந்த குற்றவாளியை 2 நாட்களில் கண்டுபிடித்துவிட்டோம். 2015-ல் பொன்னேரியில் ஒரு கொலை சம்பவம் நடந்தது. அதிலும் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டோம். தற்போது இது 3-வது கொலை. ஆனால் இப்படி ஒரு கொடூர கொலை சம்பவம் இதுவரை ரெயில் நிலையங்களில் நடந்தது இல்லை.
வாலிபருடன் காதல்...
கொலை செய்யப்பட்ட சுவாதி 2 வருடமாக ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த காதலை சுவாதி நிறுத்திவிட்டதாகவும், அந்த வாலிபருடன் சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தகவல் உள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க சொல்லி நாங்களும் கோரிக்கை வைத்து கொண்டு தான் இருக்கிறோம்.
ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்று பயணிகள் கூறுவது உண்மை தான். பொதுவாக காலை 4 மணி முதல் 10 மணி வரை ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த நேரத்தில் பாதுகாப்பு கொடுக்கிறோம்.
அதேபோல், மாலை 4 மணி முதல் இரவு கடைசி ரெயில் வரை பாதுகாப்பு கொடுக்கிறோம். எங்களிடம் இருக்கும் போலீஸ் எண்ணிக்கையை கொண்டு அதை சமாளித்து வருகிறோம். கூடுதல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வேண்டும் என்று அரசிடம் கேட்டு இருக்கிறோம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.