ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் அளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். முதல்வராக உள்ள நாராயணசாமி விரைவில் போட்டியிடும் இடைத்தேர்தலுக்காக தற்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன. அதையடுத்து அதிமுகவை கழற்றி விட்டு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைத்தார். இதில் ஜெயலலிதா கோபமடைந்து ரங்கசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ரங்கசாமி வென்றார். ராஜ்யசபா தேர்தலில் அவர் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் செயல்பட்டனர். அதனால் ரங்கசாமி தனது நண்பர் கோகுலகிருஷ்ணனை அதிமுக உறுப்பினராக்கி, அதிமுக எம்பியாக்கினார்.
அதைத்தொடர்ந்து எம்பி தேர்தலில் தனக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்களுக்கு தற்போதைய தேர்தலில் வாய்ப்பு தராமல் புறக்கணித்தார்.
மேலும் அதிமுகவுடன் கூட்டணியும் அமைக்காமல் தனித்து போட்டியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து தேர்தல் கூட்டத்தில் பேசினார். இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன.
கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியமைத்தது.
முதல்வர் பதவியை யாரும் எதிர்பார்க்காத வகையில் நாராயணசாமி பிடித்தார். அதைத்தொடர்ந்து கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து அமைச்சர் பதவி பெறுவதிலும் பலத்த போட்டி நிலவியது. நீறுபூத்த நெருப்பாக காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவுகிறது.
இதை தனக்கு சாதமாக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை சந்திக்க ரங்கசாமி கடிதம் தந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
இதுதொடர்பாக ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "தமிழக முதல்வரை சந்திக்க கடிதம் தந்துள்ளது உண்மை" என்று குறிப்பிட்டார்.
கடிதம் அளித்துள்ளது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் என்று கட்சி முக்கிய நிர்வாகிகள் தலைவர் ரங்கசாமியிடம் தெரிவித்தோம்.
அடுத்ததாக உள்ளாட்சித்தேர்தல், மக்களவைத் தேர்தலுக்காக தற்போதிலிருந்து இரு கட்சிகளும் இணைந்து செயல்படலாம் என்று திட்டமிட்டுள்ளார். அத்துடன் நாராயணசாமி ஆறு மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். முக்கியமாக அந்த இடைத்தேர்தலை மனதில் கொண்டு தனது எம்பி நண்பரின் மூலம் கடிதம் தந்துள்ளதாக தெரிகிறது. அதிமுக தலைமையிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.