கடந்த 6 மாதங்களாக எனது கணவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என முன்னாள் எம்.எல்.ஏ. குமாரசாமியின் மனைவி பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கான உதவி மையமான வனிதா சகாயவாணி ஆலோசகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ.
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.குமாரசாமி ஆவார். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவருடைய மனைவி சவிதா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குமாரசாமிக்கு மூடிகெரே மற்றும் மைசூருவில் வீடு உள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக குமாரசாமி தனது வீட்டுக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது. குமாரசாமி எங்கு இருக்கிறார்? என்பது அவருடைய மனைவி சவிதாவுக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில், குமாரசாமி, ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. இதற்கிடையே, குமாரசாமி பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பவனில் தங்கி இருப்பதாக சவிதாவுக்கு தகவல் கிடைத்தது.
கன்னத்தில் அறைந்தார்
இதையடுத்து, நேற்று சவிதா தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. பவனுக்கு வந்தார். பின்னர், சவிதா தனது கணவரிடம் ஏன் வீட்டுக்கு வரவில்லை? என கேட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த குமாரசாமி தனது மனைவியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
எம்.எல்.ஏ. பவனில் இருந்து வெளியே வந்த சவிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு வராதது ஏன் என கேட்டதற்கு எனது கணவர் என்னை கன்னத்தில் அறைந்தார். அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அதை அவர் கைவிட்டுவிட்டு என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். அவர் மீது நான் போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. எனக்கு அவருடன் சேர்ந்து வாழவே விருப்பம் உள்ளது’ என்றார்.
கணவருடன் சேர்த்து வையுங்கள்
இதற்கிடையே, அங்கு வந்த விதான சவுதா போலீசார், குமாரசாமி மற்றும் அவருடைய மனைவி சவிதாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், போலீசாரின் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மேலும், தனது கணவர் மீது சவிதா போலீசில் புகார் செய்ய மறுத்தார்.
இதனால் போலீசார் இருவரையும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான உதவி மையமான வனிதா சகாயவாணிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரிடமும் ஆலோசகர் சரஸ்வதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, ‘நான் கணவர் மீது எந்த புகாரையும் கூற விரும்பவில்லை. அவருடன் சேர்ந்து வாழவே எனக்கு விருப்பம் உள்ளது. அவருடன் என்னை சேர்த்து வையுங்கள்’ என சவிதா கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பேசி தீர்த்து கொள்கிறோம்
அதே வேளையில், ‘எனக்கு எனது மனைவியுடன் பேச விருப்பம் இல்லை. இருவருக்கும் இடையேயான பிரச்சினையை நாங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பேசி தீர்த்து கொள்கிறோம்’ என முன்னாள் எம்.எல்.ஏ. குமாரசாமி கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக குமாரசாமி மற்றும் அவருடைய மனைவி சவிதாவை மீண்டும் அழைத்து ஆலோசனை வழங்க வனிதா சகாயவாணி அமைப்பு முடிவு செய்துள்ளது.
மேலும், நிருபர்களிடம் குமாரசாமி கூறுகையில், ‘நான் எனது மனைவியை அடிக்கவில்லை. நான் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு வெளியாகியுள்ள ஆடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார்.
வழக்குப்பதிவு
இதற்கிடையே மனைவியை தாக்கிய குமாரசாமி மீது தாமாக முன்வந்து மாநில மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.