சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சொத்து தகராறு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பெரியபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் மகன் அருள் (வயது 45), விவசாயி. இவருடைய பெரியப்பா சண்முகம் (78). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் பொது சொத்தாக 5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த சொத்தை சண்முகம் மற்றும் அவரது மகன்கள் ஜோதி (58), சம்பத் (50), மேகநாதன் (46) ஆகியோர் அனுபவித்து வந்தனர்.
இந்த சொத்தில் தனக்குரிய பங்கை பிரித்து தருமாறு சண்முகம் குடும்பத்தினரிடம் சென்று அருள் கேட்டார். அதற்கு அவர்கள் 4 பேரும் சொத்தை பிரிக்க மறுத்துவிட்டனர். அப்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்தை பெற்றுக்கொள்வதாக அவர்களிடம் அருள் கூறினார்.
இதன் காரணமாக அருளுக்கும், சண்முகம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சண்முகம் குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்களது உறவினர்கள் அறிவழகன் (50), ஆனந்தராஜி (50) ஆகியோர் செயல்பட்டனர்.
விவசாயி கொலை
இந்த நிலையில் கடந்த 26.4.2008 அன்று அருள் தனது வீட்டு வாசல் முன்பு மனைவி வத்சலா, மகள்கள் வெற்றிச்செல்வி, தமிழ்செல்வி ஆகியோருடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 1.15 மணியளவில் மேகநாதன், ஜோதி, சம்பத், சண்முகம், அறிவழகன், ஆனந்தராஜி ஆகியோர் அங்கு வந்து முன்விரோதம் காரணமாக அருளை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க சென்ற வத்சலாவை அவர்கள் 6 பேரும் தள்ளிவிட்டுச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அருளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை அருள் இறந்தார்.
5 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் வத்சலா புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதன் உள்பட 6 பேரையும் கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஜோதி இறந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட மேகநாதன், சம்பத், சண்முகம், அறிவழகன், ஆனந்தராஜி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், இவர்களில் சண்முகத்திற்கு மட்டும் ரூ.1,000 அபராதமும், மற்ற 4 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.