Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

அமைதி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 141-வது இடம்


அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட 2015-ம் ஆண்டுக்கான பட்டியலில் 163 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தன.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 141-வது இடம் கிடைத்து இருக்கிறது. 2014-ல் 143-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 2 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானுக்கு 153-வது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 160-வது இடமும் கிடைத்து இருக்கிறது. தெற்காசியாவில் சிறந்த இடத்தை (13) பூடான் பிடித்தது.

அமைதி மிகவும் குறைந்த நாடாக உள்நாட்டு போர் நடக்கும் சிரியா உள்ளது. அந்த நாடு கடைசி இடத்தை(163) பிடித்தது. சோமாலியா(159), ஈராக்(161), தெற்கு சூடான்(162) ஆகிய நாடுகளும் பின்வரிசையில் உள்ளன.

மிகவும் அமைதியான நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து தட்டிச் சென்றது. அந்த நாட்டுக்கு முதலிடமும், டென்மார்க்கிற்கு 2-வது இடமும், ஆஸ்திரியாவுக்கு 3-வது இடமும் கிடைத்தன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.