கள்ளக்காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முகநூலில் பழக்கம்
சென்னை அசோக் நகர், நாயக்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ஜான் பிரதீப். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 24). திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர். நீதிமன்றத்தில் இவர்கள் மீதான விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் வெண்ணிலாவுக்கு போரூரை சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கார்த்திகேயனும், வெண்ணிலாவும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று உல்லாசமாக இருந்துவந்தனர்.
வேறு பெண்ணுடன் திருமணம்
தனக்கு விரைவில் விவாகரத்து வாங்கிக் கொடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திகேயனிடம் வெண்ணிலா வற்புறுத்தி வந்தார். கார்த்திகேயனும் தனது நண்பர் ஒருவர் வக்கீலாக இருக்கிறார், அவரிடம் கூறி விரைவில் ஜான் பிரதீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
இந்த நிலையில், கடந்த 6-ந்தேதி கார்த்திகேயன், வெண்ணிலாவுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த வெண்ணிலா அதிர்ச்சி அடைந்து, கார்த்திகேயனை தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனால் அவரோ, வெண்ணிலாவுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த வெண்ணிலா தாலி கட்டிய கணவரிடமும் செல்ல முடியாமல், நம்பிச் சென்ற கள்ளக்காதலனும் கைவிட்டுவிட்டாரே? என்ற சோகத்தில் இருந்தார்.
உருக்கமான கடிதம்
வெண்ணிலா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு வெண்ணிலா கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், ‘நான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு நீ (கார்த்திகேயன்) தான் காரணம். என்னை ஏமாற்றியது போல் இனிமேல் யாரையும் இப்படி ஏமாற்றிவிடாதே. வயிறு எரிந்து சொல்கிறேன். நீ நன்றாக இருக்கமாட்டாய். நாசமாய் போய்விடுவாய். இது என்னுடைய சாபம்’ என்று எழுதி உள்ளார்.
கள்ளக்காதலன் கைது
வெண்ணிலாவுக்கு திருமணம் முடிந்து 13 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி விசாரணை நடத்தி, கார்த்திகேயனை கைது செய்தார். அவர் நேற்று மாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் எந்தவித சம்பந்தமும் இல்லாத கார்த்திகேயன் திருமணம் செய்த அப்பாவி புதுப்பெண்ணின் நிலைமை தான் கேள்விக்குறியாக உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.