பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே உள்ள அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா அப்பாசி (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார்.
ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார்.
அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மரியாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.