பாகிஸ்தானில் நடைபெற்ற ஆணவக்கொலைகள் தொடர்பான செய்திகள் அதிர்ச்சி அளித்துவரும் நிலையில் அங்கு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் மற்றொரு ஆணுடன் ஓடிய இளம்பெண் முகத்தில் கரி பூசப்பட்டு, மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.
லாகூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகவல்பூரின் உச் செரீப் கிராமத்தில் 23 வயது இளம்பெண்ணின் முகத்தில் கரியை பூசி, மொட்டை அடித்து அவருடைய பெற்றோர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறிஉள்ளார். இளம்பெண் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஆணுடன் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஓடிவிட்டார், பின்னர் கிராமத்திற்கு திரும்பியதும் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. கிராமத்துக்கு திரும்பிய இளம்பெண்ணை அவருடைய தந்தை, கணவர் மற்றும் சித்தி துன்புறுத்தி உள்ளனர். இளம்பெண்ணை கிராம பஞ்சாயத்திற்கு இழுத்து சென்று உள்ளனர்.
குடும்ப கவுரவத்திற்கு களங்கம் விளைவித்ததாக அவருக்கு தண்டனை கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது.
மூத்த போலீஸ் அதிகாரி சாதிக் செய்தியாளர்களிடம் பேசுகையில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் பஞ்சாயத்தாளர்கள் என 10 பேர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சித்தி கைது செய்யப்பட்டு உள்ளனர், என்று கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விரைவான விசாரணை நடத்தப்படும் என்றும் மீதம் இருக்கும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஆணவக் கொலை உள்பட பல்வேறு குற்றங்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் பெரிதும் அறியப்பட்டது.
பஞ்சாப் மாகாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் அவருடைய கணவர் ஆணவக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் குஜ்ரங்வாலாவில் குடும்பத்தார் சம்மதம் இன்றி திருமணம் செய்து வாழ்ந்து வந்த இளம் கர்ப்பிணி தாய் அவரது உறவினர்களால் கழுத்து அறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதேபோன்று கடந்த வாரம் லாகூரில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை அவருடைய தாயார் உயிருடன் எரித்து கொலை செய்தார். கடந்த வருடம் மட்டும் பாகிஸ்தானில் 1,100 பெண்கள் அவர்களுடைய உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.