ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைவரி விதிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரேவிதமான மறைமுக வரிவிதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில் மாதிரி ஜி.எஸ்.டி. சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 162 பிரிவுகள், 4 அட்டவணைகள் உள்ளன.
மேலும் இதில் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைவரி விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “மாதிரி சட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் யோசனைகளை, கருத்துகளை நிதி மந்திரிகளின் அதிகாரம் வழங்கப்பட்ட குழு செயலகத்துக்கு அல்லது நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.