Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

சார்ஜரில் இருந்தபோது அழைப்பை ஏற்ற பெண் செல்போன் வெடித்து பலி


தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டதில் சார்ஜரில் இருந்த செல்போனை எடுத்துப் பேசிய 28 வயது பெண் செல்போன் திடீரென்று வெடித்த விபத்தில் முகம் சிதைந்து உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டதில் சார்ஜரில் இருந்த செல்போனை எடுத்துப் பேசிய 28 வயது பெண் செல்போன் திடீரென்று வெடித்த விபத்தில் முகம் சிதைந்து உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள சிடாப்பூர் மண்டலத்தில் வசித்துவந்த விமலா(28) இன்று தனது செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. சார்ஜரில் இருந்த இணைப்பை அகற்றாமல் செல்போனை எடுத்து பேச முயன்றபோது திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் முகம் கருகி, சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விமலா உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பெண் அருகாமையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.