ஒரே இதயம், கல்லீரலுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தன.
ஒட்டிப் பிறந்த குழந்தைகள்
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாஸ்தூர் பகுதியை சேர்ந்த பெண் தஸ்லீன் மசூல்தர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக லாத்தூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அறுவை சிகிச்சை மூலம் கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு, உடல் ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்த போதிலும், இரு குழந்தைகளுக்கும் தனித்தனி தலைகள், தலா 2 கைகள், கால்கள் இருந்தன.
உயிரிழப்பு
ஆனால் விசித்திரமாக அக்குழந்தைகளுக்கு இதயமும், கல்லீரலும் ஒன்றாகவே இருந்தன. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் பிரிக்கும் முயற்சிக்காக மும்பை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர்கள் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வேன் புனே வந்து கொண்டிருந்தபோது, ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளின் இதயதுடிப்பு நின்றது. பிறப்பால் இணைபிரியாத அக்குழந்தைகளின் உயிரும் ஒன்றாகவே பிரிந்தது. மருத்துவ துறையினருக்கு இந்த இரட்டையர்கள் சவாலாக இருந்தபோதிலும், உயிரிழப்பு சோகமாக அமைந்து விட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.