Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

வீடியோ:ஒபாமாவுடன் டாங்கோ நடனம் ஆடிய கலைஞர் உலக சாதனை நிகழ்த்தினார்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்சைலுடன் கடந்த மார்ச் மாதம் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்களுக்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மேக்ரி நேற்று இரவு விருந்து அளித்தார். நூற்றுக்கணக்கான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் ஒபாமா  பெண் டாங்கோ நடன கலைஞர்  மோரா காடாய்யுடன் இணைந்து  ஒபாமா  டாங்கோ நடனம் ஆடினார். இந்த வீடியோ அப்போது இணையதளங்களில் வெளியாகி வைரலானது.

ஒபாமாவுடன் நடனம் ஆடிய மோரா காடாய்  தற்போது திங்கட்கிழமை அந்தரத்தில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மேடையில் டாங்கோ நடனம் ஆடி உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார்.

அர்ஜென்டினாவின் தலைநகரில் 200 அடி உயரத்தில் அமைக்கபட்டு இருந்தசிறிய  மேடையில் மோரா காடாய்  தனது  ஜோடியுடன் சழன்று சுழன்று டாங்கோ நடனம் ஆடினார்.இந்த நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.