Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

மலேசிய தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணை நியமித்து ஒபாமா உத்தரவு


மலேசியா நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஷிரின் லக்டிர் என்பவரை நியமித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகரில் பிறந்த நூர் லக்டிர் என்பவர் 1920-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். இவரது மகளான கமலா ஷிரின் லக்டிர், அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் கல்லூரி மற்றும் தேசியப் போர் கல்லூரி ஆகியவற்றில் படித்து, பின்னர் வெளியுறவுத்துறை சார்ந்த படிப்பையும் 1991-ம் ஆண்டு முடித்தார். 1991 முதல் 2000-ம் ஆண்டுவரை வெளியுறவுத்துறை அலுவலகங்களில் பல்வேறு பணிகளில் திறம்பட செயலாற்றினார்

இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றிய இவர், 2001-2005 வரை சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அலுவலராகவும், 2009-2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெல்பாஸ்ட் வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

2011 முதல் 2015 வரை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்கள் பிரிவு செயலாளருக்கு செயல் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம்வாய்ந்த கமலா ஷிரின் லக்டிர்-ஐ மலேசியா நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் தற்போதைய மலேசிய தூதர் ஜோசப் யுன் வகித்து வரும் பதவியை கமலா ஷிரின் லக்டிர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.