Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீர் தட்டுப்பாடு: மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து நோயாளிகள் வெளியேற்றம்


கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தண்ணீர் பற்றாக்குறையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஆபரேஷன் நடைபெறவிருந்த பல நோயாளிகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இன்று திடீரென்ற தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்த ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவு, பிரசவ அறை மற்றும் அறுவை சிகிச்சை அறைகளின் வழக்கமான செயல்பாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இன்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காத்திருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அவர்கள் ஆபரேஷன் தியேட்டர்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகை நாளில் இதே ஆஸ்பத்திரியில் உள்ள இதய அறுவை சிகிச்சை அரங்கத்தினுள் சில டாக்டர்கள் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்து சாப்பிட்டதாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.