மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடந்த ரெயில்வே விழாவில் பா.ஜ.க. பெண் எம்.பி.க்காக சிறப்பு ரெயில் விடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ரெயில்வே விழாவில் மத்திய ரெயில்வே ராஜாங்க மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டார். இதற்காக அவர் சாகர் நகரில் இருந்து பினா எனும் நகருக்கு சிறப்பு ரெயிலில் வந்திருந்தார். மத்திய ரெயில்வே மந்திரி இத்தகைய சிறப்பு ரெயிலை பயன்படுத்த அனுமதி உள்ளது.
மனோஜ் சின்கா பங்கேற்ற அந்த விழாவுக்கு மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.பி. பூனம் மகாஜனும் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் விழாவில் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் ரெயில்வே மந்திரி மனோஜ் சின்கா பினாவில் இருந்து போபால் நகருக்கு தனக்குரிய சிறப்பு ரெயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பினா நகரில் நடந்த விழா அதிக நேரம் நடந்ததால் அவர் சிறப்பு ரெயிலில் போபால் செல்லும் திட்டத்தை கைவிட்டார். கடைசி நேரத்தில் அவர் சுற்றுப்பயணம் மாற்றப்பட்டது.
இதற்கிடையே போபாலில் இருந்து இரவு 9 மணிக்கு மும்பை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய பூனம் மகாஜன் திட்டமிட்டிருந்தார். அவர் ரெயில்வே மந்திரிக்கான சிறப்பு ரெயிலில் பினா நகரில் இருந்து போபால் நகருக்கு சென்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பூனம் மகாஜன் சிறப்பு ரெயிலில் பயணம் செய்ததற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிஸ்ரா இது பற்றி கூறுகையில், ‘‘ரெயிலில் பயணம் செய்யும் எம்.பி.க்கள் அதற்குரிய கூப்பன் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பயண டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் பூனம் மகாஜன் டிக்கெட் எடுக்காமல் சிறப்பு ரெயிலில் சென்றுள்ளார். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் மேற்கு மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பூனம் மகாஜன் பயணத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை’’ என்று விளக்கம் அளித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.