Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

ஜிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் வீரர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது; இந்தியா மறுப்பு


ஜிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் வீரர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்தியா தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டது.இதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது. ஆப்ரிக்க நாட்டிற்கான இந்திய தூதர் ஆர். முசாகுயிர், ஓட்டலில் இந்திய நாட்டு வீரரை கைது செய்வதை தடுக்க முயற்சி செய்தார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டது.

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் இந்திய வீரரை அடையாளம் காட்டியதாகவும், சட்டப்படி வீரரின் பெயரை வெளியிட அதிகாரம் இல்லை எனவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் செய்தியில் கூறப்பட்டது. இந்தியாவின் அரசுதரப்பு தகவல்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.

 “ஹராரே ஓட்டலில் பாலியல் பலாத்கார வழக்கில் இந்தியருக்கு தொடர்பு உள்ளதாக மீடியா தகவல்கள் வெளியாகியது தொடர்பாக ஜம்பாப்வேவிற்கான இந்திய தூதரிடம் நாங்கள் பேசினோம். இந்த செய்தியானது முற்றிலும் பொய்யானது. எந்தஒரு கிரிக்கெட் வீரருக்கும் இதில் தொடர்பு கிடையாது,” என்று தகவல்கள் கூறிஉள்ளன. ”ஸ்பான்ஸர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரும் இக்குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்று கூறிஉள்ளார். நம்முடைய தூதர் இவ்விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார், தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் உள்ளார்,” என்று கூறப்பட்டு உள்ளது.

பிசிசிஐ தன்னுடைய பங்கிற்கு, இவ்விவாகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது, இப்பிரச்சனையில் சரியான உண்மையை தீர்மானிக்கவேண்டியது உள்ளது என்று கூறிஉள்ளது.  ”இப்பிரச்சனையில் அடுத்த நகர்வுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இது மிகவும் முக்கியமான பிரச்சனை. இப்பிரச்சனையை உணர்வு பூர்வமாக அறிந்துள்ளோம், இப்பிரச்சனையில் உண்மையை கண்டறியாமல் பிசிசிஐ கருத்து தெரிவிக்காது,” என்று கிரிக்கெட் வாரிய உயர்மட்ட அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.