Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 28, 2016

“நான் முதலிடம் வரவேண்டும் என்று விரும்பவில்லை,” பீகாரில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த ரூபி ராய்


பீகாரில் பிளஸ்-2 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவி ரூபி ராய் பேசுகையில், “நான் எப்போதும் முதலிடம் வரவேண்டும் என்று விரும்பவில்லை,” என்று கூறிஉள்ளார்.

பீகார் பிளஸ் 2 தேர்வில் கலை பாடப்பிரிவில், 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய் (17) உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டியில் ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ என்பதை ‘புரோடிகல் சயின்ஸ்’ என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் பாடம், சமையல் கலை சம்பந்தப்பட்டது எனக் கூறியதும் அவரின் தேர்வை கேள்விக்கு உள்ளாக்கின. இதனையடுத்து தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகியது. பீகாரில் ஏற்கனவே தேர்வின் போது காப்பி அடித்தல் மற்றும் பிற மோசடிகள் வெளியாகி அதிர்ச்சியளித்த நிலையில் இப்பிரச்சனையும் பூதகரமாக வெடித்தது.

ரூபி ராய் போன்று கலை மற்றும் அறிவியல் பிரிவில் 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதியின்றி முதலிடம் பிடித்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

13 மாணவர்களும் மறுதேர்வுக்கு ஆஜராகி முந்தைய தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரூபி ராய் மட்டும் மறுதேர்வுக்கு வராமல் பல்வேறு காரணங்களைக் கூறி இழுத்தடித்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை பாட்னாவில் கல்வித் துறையின் சிறப்பு குழு முன்பாக மறுதேர்வுக்கு ரூபி ராய் ஆஜரானார். மறுதேர்வில் அவரின் தகுதியிழப்பை குழுவினர் உறுதி செய்ததை அடுத்து, ரூபி ராயை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றது.

ரூபியின் தந்தையார் தன்னுடைய மகளிடம் “தேர்வு முடிவை நான் பார்த்துக் கொள்கின்றேன்,” என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய தந்தை யாருக்காவது லஞ்சம் கொடுத்தாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரூபி ராய் விசாரணை அதிகாரிகளிடம், “நான் தேர்ச்சி பெறவேண்டும் என்றுதான் விரும்பினேன், ஒருபோதும் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை,” என்று கூறியதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டு உள்ளது. ரூபியுடன் இவ்விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தனியார் நிர்வாகம் செல்லும் கல்லூரியின் உரிமையாளர் பச்சாராயும் கைது செய்யப்பட்டு உள்ளார். ருபியின் தந்தை பச்சா ராயிக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மாணவி கைது செய்யப்பட்டு உள்ளார், ஆனால் அவருடைய பெற்றோர்கள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.