Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

ஆபாச தொல்லை கொடுத்த வாலிபரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்ற பெண்களால் பரபரப்பு


இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த வாலிபரை நிர்வாணமாக்கி பெண்கள் ஊர்வலமாக இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தாய், மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆபாச பேச்சு

தானே விடாவா பகுதியை சேர்ந்தவர் சஞ்சிவினி(வயது35). இவரது மகள் பிரியா(வயது18). இவர் கோப்ரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நவிமும்பை ஐரோலியை சேர்ந்த சுனில்குமார்(21) என்ற வாலிபர் பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆபாச குறுந்தகவல்களும் அடிக்கடி அனுப்பி இருக்கிறார். இதுபற்றி பிரியா தனது பெற்றோரிடம் கூறி, கோப்ரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆட்டோவில் கடத்தல்

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தாய், மகள் இருவரும் தங்கள் உறவினர் கமலேஷ் என்பவருடன் ஐரோலியில் உள்ள சுனில்குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர். பின்னர் ஆட்டோவில் ஏற்றி தானேக்கு கடத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தானே தொகுதி நவநிர்மாண் சேனா கட்சி மகளிர் அணி தலைவி சமிஷா மார்க்கண்டேயின் முன்னிலையில் சுனில் குமாரை நிறுத்தி தன்னிடம் ஆபாசமாக பேசியதை பிரியா கூறினார்.

நிர்வாணமாக்கி தாக்குதல்

பின்னர் கடும் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென சுனில்குமாரை இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தாக்குதலின் உச்சமாக சுனில்குமாரின் சட்டை, பேண்டு, உள்ளாடையை கழற்றி நிர்வாணப்படுத்தினர்.

பின்னர் அவரை நிர்வாண கோலத்திலேயே கோப்ரி போலீஸ் நிலையம் வரையிலும் செருப்பால் அடித்தபடி ஊர்வலமாக இழுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பெண்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டனர். பெண்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை போலீசார் தானே மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

3 பேர் கைது

சுனில்குமாரை நிர்வாணமாக்கி தாக்கியதற்காக சமிஷா மார்க்கண்டே, பிரியாவின் தாய், உறவினர்கள் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரியா, சஞ்சிவினி, கம்லேஷ் ஆகிய மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

ஆபாச தொல்லை கொடுத்த வாலிபரை பெண்களே நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.