Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

நாக்பூர் ஆஸ்பத்திரியில் தோல் இல்லாமல் பிறந்த அதிசய பெண் குழந்தை


நாக்பூர் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.

அதிசய பெண் குழந்தை

நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஹார்லிகுவின் இக்தியோசிஸ்

இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தான் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன என்றும், மருத்துவ துறையில் இதுபோல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஹார்லிகுவின் இக்தியோசிஸ்’ என பெயர் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

3 லட்சத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற அரிய வகை தோற்றத்துடன் பிறப்பதாக அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த டாக்டர் அவினாஷ் பனைத் நிருபர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.