பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நாகர்கோவிலில் பஸ்நிலையம், பள்ளிகள் அருகே சிகரெட் விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நாகர்கோவிலில் இன்று நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
கோர்ட்டு உத்தரவுப்படி பஸ்நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு அருகே சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளிகள் மற்றும் பஸ்நிலையங்கள் அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்கப்படுகிறதா? என்பதை சோதனை செய்தனர்.
இதில் அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள 2 கடைகளில் சிகரெட் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல நாகர்கோவில் கேப் ரோட்டில் ஒரு பள்ளி முன்பு உள்ள கடையில் சிகரெட் விற்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுபோல 4 கடைகளில் சிகரெட் விற்பனை செய்வது தெரியவந்ததை அடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொண்டனர்.
அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடர்ந்து பொது இடங்களில் புகை பிடித்த பலரும் அதனை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சோதனையில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் மாதேவன் பிள்ளை, ஊழியர்கள் பகவதி பெருமாள், ஜான், சத்தியராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.