மாடலிங் துறையில் நுழையும் ஆசையில் வரும் இளம் பெண்களை மயக்கி, நிர்வாணப் படம் எடுத்து, விபசார வலையில் தள்ளிய 23 வயது பெண்ணை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் ரகசியமாக விபசார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை வலைவிரித்துப் பிடிக்க தீர்மானித்த போலீசார், வெர்சோவா பகுதியில் உள்ள 14 மாடி அடுக்கு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்கு சில போலி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்தனர்.
அங்கு அழகிய இளம் பெண்களை வைத்து ஒரு பெண் விபசாரம் செய்து வருவது உறுதி செய்யப்பட்ட பின்னர், நேற்று அந்த வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்திய போலீசார், பிரபல மாடல் அழகியான ரேகா வைஷ்ணவ்(23) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மாடலிங் அழகிகளை உருவாக்குவதுபோல் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்திவந்த ரேகா, மாடலிங் துறையில் நுழைய விரும்பும் ஆசையில் வரும் இளம் பெண்களை மயக்கி, நிர்வாணப் படம் எடுத்து, அந்தப் படங்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் வாடிக்கையாளர்களிடம் காட்டி, ஏராளமான பெண்களை விபசார வலையில் தள்ளிய உண்மை தெரியவந்தது.
அந்த வீட்டில் நூற்றுக்கும் அதிகமான இளம்பெண்களின் விதவிதமான நிர்வாணப் படங்களை கைப்பற்றிய போலீசார், அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அடைத்து வைத்திருந்த இரு இளம்பெண்களை மீட்டனர்.
குற்றவாளி ரேகா வைஷ்ணவை கைது செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர். மும்பையில் உள்ள பல பெரிய இடத்து புள்ளிகளுக்கு இளம்பெண்களை ரேகா சப்ளை செய்து வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.