Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்


குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதனை மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்துள்ளார் அந்த கல் மனது படைத்த தாய்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அலேக்சாண்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி (வயது 22) அவருக்கு கடந்த மாதம் 20-தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23-தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை சமா்தானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மேரி குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தையை தனது நெஞ்ச்சோடு வைத்து இறுக்கி அணைத்துள்ளார். இதனால் குழந்தை இறந்து போனது. மேரியின் செயலை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தையின் மூக்கு மற்றும் வாயைச் சுற்றி காயமாக இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் மேரியை கைது செய்தனர்.

 இது குறித்து மேரி கூறுகையில்,

எனக்கு என் மகனை ரொம்ப பிடிக்கும். கோபத்தால் எதிர்பாராவிதமாக குழந்தையை கொலை செய்து விட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.