Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2016

மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்தது: லிபிய கடற்கரையில் 104 உடல்கள் ஒதுங்கின


கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், மத்திய தரைக்கடல் பகுதியை தாண்டும்போது படகுகள் விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் சுமார் 700 பேருடன் வந்த அகதிகள் படகு எகிப்து நாட்டை ஒட்டியுள்ள கிரெட்டே என்ற கடற்பகுதி வழியாக வந்தபோது மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான தகவல் அறிந்ததும், கிரீசில் இருந்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலோர ரோந்து கப்பல்கள், ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். பலரைக் காணவில்லை.

இந்நிலையில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அளவுக்கதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டிருந்ததால், சுமை தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.