Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

குரங்கால் 4 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்த கென்யா மக்கள்


கென்யாவில் குரங்கு ஒன்று மின்சார நிலையத்தில் மின்மாற்றி மீது விழுந்ததால் கென்யா முழுவதும் 4 மணி நேரம் மின்சாரம் விநியோகம் தடைபட்டது.

கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது  குரங்கு ஒன்று விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. இதனால் 180 மெகாவாட் அளவிலான மின்சாரம் விநியோகிப்பது தடைபட்டது.

இது குறித்து ஜிடரு புனல் மின்சார நிறுவனத்தின் பொதுமேலாளர் கென்ஜென் கூறியதாவது:

வனவிலங்குகள் வரமால் பாதுகாப்புக்காக மின்நிலையங்களை சுற்றி மின்வேலிகள் அமைப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்களுடைய எல்லா மின் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது  குரங்கு விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. 4 மணி நேரத்தில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாக கென்யாவில் தொழில் துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமாக குரங்கு அதிர்ஷ்டவசமாக பிழைத்துகொண்டது. வைல்ட் லைஃப் சேவை மையத்தில் அந்தக் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.

 ஜிடரு புனல் மின்சார நிலையம் கிழக்கு ஆப்ரிக்காவில் பெரிய நீர்மின்சார நிலையம் ஆகும். இது அந்நாட்டின் மிக முக்கிய ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.