மயக்க மருந்து கொடுத்து தன்னை கற்பழித்ததாக, ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல் அழகி பூஜா மிஸ்ரா புகார் கொடுத்தார். அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாடல் அழகி
புகழ்பெற்ற மாடல் அழகி பூஜா மிஸ்ரா. இவர் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் ஆனவர்.
இவர், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் புகைப்பட படப்பிடிப்புக்காக கடந்த 10–ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றார். அடையாளம் தெரியாத சிலர், அங்கு தன்னை கற்பழித்ததாக பூஜா மிஸ்ரா போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி அவர் போலீசில் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:–
கற்பழிப்பு
பத்திரிகையாளர் சந்திப்பும், மறுநாள் புகைப்பட படப்பிடிப்பும் ஒரு நடன கூடத்தில் நடைபெற்றது. நடன கூட உரிமையாளர், கட்டணத்தை அதிகரிப்பதற்காகவே, திட்டமிட்டு தாமதப்படுத்தினார். நான் படப்பிடிப்பில் இருந்தபோது, எனது பணம் ரூ.2 லட்சத்தை திருடிக் கொண்டார்.
புகைப்பட குழுவைச் சேர்ந்த 3 பேர் அதிக பணம் கேட்டு மிரட்டினர். 13–ந் தேதியன்று, எனக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதும் மயங்கி கிடந்த என்னை அடையாளம் தெரியாத யாரோ கற்பழித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசாரணை
இதன்பேரில், கற்பழிப்பு மற்றும் பிளாக்மெயில் வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே சமயத்தில், நடன கூடத்தின் உரிமையாளர் ரிது தேஷ்வால், மாடல் அழகி பூஜா மிஸ்ரா மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதில், தங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1.5 லட்சத்தை பூஜா மிஸ்ரா கொடுக்க மறுப்பதாகவும், 11–ந் தேதியன்று இரவு, தன்னை டெலிபோனில் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.