Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

திருவனந்தபுரம் அருகே ஆசிரியையை நடுரோட்டில் குத்திக்கொன்ற ராணுவ வீரர்


திருவனந்தபுரத்தை அடுத்த நேமத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் சுமிதா, (வயது 36).

நேமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அட்டக்குளம்கரையைச் சேர்ந்த ராணுவ வீரர் குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் ஆசிரியை சுமிதாவிடம் வளர்ந்து வந்தனர்.

கோர்ட்டு உத்தரவுப்படி மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, நேற்று சுமிதா குழந்தைகளை குமாருடன் அனுப்பி வைத்தார். நேற்று மாலை குழந்தைகளை மீண்டும் அழைத்துச் செல்ல நேமம் பஸ் நிலையம் அருகே காத்து நின்றார்.

அப்போது குமார் மட்டும் தனியாக வந்தார். அவரிடம் குழந்தைகளை அழைத்து வராதது ஏன்? என சுமிதா கேட்டார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுமிதாவை சரமாரியாக குத்தினார்.

நடுரோட்டில் நடந்த இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குமாரை பிடிக்க முயன்றனர். அவர் பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றார்.

இதற்கிடையே நேமம் போலீசார் விரைந்து வந்து படுகாயங்களுடன் கிடந்த சுமிதாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுமிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் குமாரை தேடினர். அருகில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.