Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

லிங்க்டுஇன் நிறுவனத்தை 26.2 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது மைக்ரோசாப்ட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் லிங்க்டுஇன் தொழில்முறை சமூகவலைதளத்தை 26.2 பில்லியன் டாலர்கள் தொகைக்கு வாங்க முடிவு செய்துள்ளது.

தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்டுஇன் வேலை தேடுபவர்களையும், வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் நிறுவனத்தின் மதிப்பு பெரிய அளவில் உயரவில்லை.

இந்நிலையில் லிங்க்டுஇன் நிறுவனத்தை 26 பில்லியன் டாலருக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

லிங்க்டுஇன் பங்கு ஒன்றிற்கு 196 டாலர்கள் வழங்க மைக்ரோசாப்ட் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த செய்தியை மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா உறுதிப்படுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.