Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

விபத்து ஏற்படுத்திய சம்பவம்: வயது வந்தோராக கருதி விசாரிக்க சிறுவர் நீதி ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராக மனு


புதுடெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம்  சித்தார்த்தா சர்மா(32 வயது) வணிக ஆலோசகர் சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் மோதியதில் உயிரிழந்தார்.

அந்த வெளிநாட்டுக் காரை ஓட்டி வந்தது, பிரபல தொழிலதிபர் ஒருவரின், 17 வயது மகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து   மறுநாளே கைது செய்யப்பட்ட போதிலும், 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் உடனடியாக ஜாமீனில் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.  இதனால், ஆத்திரம் அடைந்த விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர்,  குற்றவாளிகள் மீது மென்மையாக போலீஸ் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து சிறுவனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போலீசார் துவங்கினார். 18 வயது நிறைவு அடைவதற்கு நான்கு நாட்கள் முன்புதான் இந்த விபத்து நடைபெற்றதால், சிறுவனை வயது வந்தோராக கருதி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் சிறுவர் நீதி ஆணையத்திடம் போலீஸ் கோரிக்கையை முன்வைத்தது.

போலீசாரின் இந்த கோரிக்கையை ஏற்ற சிறார் நீதி ஆணையம், வயது வந்தோராக கருதி விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கியது. இந்த நிலையில், வயது வந்தோராக கருதி விசாரிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நீதிமன்றத்தில் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.