Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

மரியா ஷரபோவா டென்னிஸ் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை


ரஷியாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா ஆட்டத்தில் மட்டுமின்றி விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டுவதிலும் கொடிகட்டி பறந்தார். கடந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடி வருவாய் ஈட்டிய ஷரபோவா தொடர்ந்து 11–வது ஆண்டாக அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

அழகு பதுமையான 28 வயதான ஷரபோவா தனது 17 வயதில் விம்பிள்டன் பட்டத்தை (2004) வென்று அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் ஷரபோவா இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 2014–ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்துக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாவிட்டாலும் ஷரபோவா, தோள்பட்டை காயத்துக்கு மத்தியிலும் ஆட்டத்தில் தொய்வின்றி ஜொலித்தார்.

இந்த நிலையில், அண்மையில் ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் சிக்கினார்.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மரியா ஷரபோவா டென்னிஸ் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிப்பதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து விளையாட்டு

உடல்நலனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால், மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்ததாகவும், இந்த மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது பற்றி தனக்கு தெரியாது என்று ஷரபோவா விளக்கம் அளித்து இருந்தார். மெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்தது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.