Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

கோமாவில் இருக்கும் நபரை இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடுவதால் பிரச்சனை: நீதிமன்றம் விசித்திர தீர்ப்பு


கோமாவில் இருக்கும் நபரை தங்களது கணவன் என்று இரண்டு பெண்கள் சொந்தம் கொண்டாடியதை அடுத்து நீதிமன்றம் தலையிட்டு விசித்திரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோமாவில் இருக்கும் தன் கணவனை மற்றொரு பெண் கடத்தி வைத்திருப்பதாகாவும், உடனே தனது கணவனை மீட்டு தரும்படியும் நீதிமன்றத்தை அணுகினார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். போலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட அந்த ஆண் ஒரு பெண்ணின் வீட்டில் இருப்பதும், அந்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கோமாவில் இருப்பவரை தன் கணவன் என்று அந்த பெண் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்னையும் அவரது மகனையும் அழைத்து நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் இடைக்கால தீர்ப்பாக ‘கோமாவில் இருக்கும் ஆண் தொடர்ந்து அதே வீட்டில் இருக்கலாம் என்றும், ஆனால் வழக்கு தொடுத்த பெண் வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் தன் கணவன் என்று குறிப்பிடும் அந்த ஆணை பார்க்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.

யார் உண்மையான மனைவி என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்று கூறி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.