Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

14 வயது மகளை 51 வயதுக்காரருக்கு பரிசளித்த தந்தை


அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். அதில் இவரது வீட்டில் சந்தேகப்படும் நிலையில் ஏராளமான சிறுமிகள் இருப்பதாகவும், அவர்களை இவர் கற்பழித்து கொடுமைப் படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு 12 சிறுமிகள் இருந்தனர். அவர்கள் 6 மாத குழந்தை முதல் 18 வயது வரை இருந்தனர்

அவர்களில் 18 வயது சிறுமியை அவளது பெற்றோர் டேனியல்-சவில்லா ஸ்டாட்ஷ்பஸ் ஆகியோர் பரிசளித்துள்ளனர். அப்போது அவளுக்கு 14 வயது, டேனியர் தம்பதி கடனில் தத்தளிது பணக் கஷ்டத்தில் இருந்த போது கப்லான் உதவி செய்து அவர்களது எஸ்டேட்டை மீட்டுக் கொடுத்தார். அதற்கு பரிசாக தனது 14 வயது மகளை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு கப்லான் மூலம் பிறந்த 3 வயது மற்றும் 6 மாதத்தில் 2 குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் தவிர மற்ற 11 சிறுமிகளும் யார்? எதற்காக அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இதற்கிடையே கப்லானை போலீசார் கைது செய்தனர். சிறுமியை கற்பழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோரும் கைதாகியுள்ளனர். இவர்கள்  அனைவரும் ரூ.6.5 கோடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.