சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் விற்பனை மூலம் மலாலா கோடீஸ்வரியாக மாறியிருக்கிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிழைத்தார். அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
அதன் பிறகு மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து “ஐயாம் மலாலா” என்ற புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், பதிப்புரிமையை பாதுகாக்கவும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2015 லட்சம் பவுண்டாக (சுமார் ரூ.15 கோடி) இருந்தது. மேலும் அந்த நிறுவனம் 11 லட்சம் பவுண்டு (சுமார் ரூ.7.4 கோடி) லாபம் ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.
மலாலாவின் புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமை தொகை செலுத்துவதன் மூலம் அந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது. மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக உள்ளனர்.
சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் விற்பனை மூலம் மலாலா கோடீஸ்வரியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.