Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

மகன்கள் மணல் கடத்தல், கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளதால் மந்திரிகள் மகாதேவப்பா, மகாதேவ பிரசாத்தை நீக்க வேண்டும் ஈசுவரப்பா வலியுறுத்தல்


மகன்கள் மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளதால் மந்திரிகள் மகாதேவப்பா, மகாதேவ பிரசாத் ஆகியோரை நீக்க வேண்டும் என்று ஈசுவரப்பா வலியுறுத்தினார்.

கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மந்திரிகளை நீக்க வேண்டும்
முதல்–மந்திரியின் சொந்த மாவட்டமான மைசூருவில் மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான கல்குவாரி தொழில் ஜோராக நடந்து வருகிறது. இதில் பொதுப்பணித்துறை மந்திரி மகாதேவப்பாவின் மகன் மீது வழக்கு பதிவாகியுள்ளது. கூட்டுறவுத்துறை மந்திரி மகாதேவ பிரசாத்தின் மகன் சட்ட விரோதமாக கல்குவாரி தொழில் செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த அரசு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்துள்ளது. மணல் கடத்தலை தடுக்க முயற்சி செய்யும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் இந்த அரசு எதுவுமே நடக்காதது போல் மவுனமாக உள்ளது. மந்திரி மகாதேவப்பாவின் மகன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். இந்த மணல் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த சட்டசபை கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று நாங்கள் சட்டசபையில் வலியுறுத்தினோம்.

மந்திரிகளை நீக்க வேண்டும்
இதை ஏற்க சித்தராமையா மறுத்துவிட்டார். இப்போது மந்திரி மகாதேவப்பாவின் மகனுக்கு தொடர்பு உள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. அதே போல் மந்திரி மகாதேவ பிரசாத்தின் மகன் சட்டவிரோதமான கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருடைய மகனின் கல்குவாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மந்திரிகள் மகாதேவப்பா மற்றும் மகாதேவ பிரசாத் ஆகியோரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும். மணல் கடத்தல் என்பது மாநிலம் முழுவதும் அதிகமாக நடந்து வருகிறது. தார்வாரில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும். மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஜெயலலிதா மனு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் ஜெயலலிதா மனு கொடுத்துள்ளார். பிரதமர் தொலைநோக்கு பார்வை கொண்டவர். ஜெயலலிதா அடிக்கடி இந்த பிரச்சினையை கிளப்புகிறார் என்பது பிரதமருக்கு தெரியும். கர்நாடகத்தின் நீர், நிலம், எல்லை, மொழியை காப்பதில் நாங்கள் கர்நாடக அரசுக்கு உறுதுணையாக நிற்போம். கர்நாடகத்தின் நலனை காக்க நாங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக போராடுவோம்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.