Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

மதுரை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் செந்தில் புகார் ‘‘என்னைப்பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’


நான் இறந்து விட்டதாக வீணாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் செந்தில், போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்று காலை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார்யாதவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

இறந்து விட்டதாக வதந்தி
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக நான் திருச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்–அப்பில் செய்திகள் பரவுவதாக எனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

இந்த செய்தியை கேட்டு உறவினர்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பல தரப்பினரும் என்னிடம் அன்று இரவு விடிய, விடிய நலம் விசாரித்தனர். இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன்.

வாட்ஸ்–அப்பில் அவதூறு
இது தவறுதலாக பரவியிருக்கக்கூடும் எனக்கருதிய நான் பத்திரிகையாளர்களை சந்தித்து, நலமாக இருக்கிறேன் என்று பேட்டி கொடுத்தேன். அதுவும் மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. சில நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு நான் வந்தேன்.

அப்போது உறவினர்கள் என்னிடம் நலம் விசாரிக்க தொடங்கினார்கள். நானும் உறவினர்கள் முன்னர் நடந்த சம்பவங்களை தெரிவித்தேன்.

ஆனால் அவர்கள் இன்னும் நீ இறந்து விட்டதாக மீண்டும் வாட்ஸ்–அப்பில் செய்திகள் பரப்பி வருகிறது என தெரிவித்து அதை எனக்கு காட்டினர். மீண்டும் இதேபோல் வதந்தி பரப்புகிறார்கள் என்றால், இது யாரோ விஷமிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்கிறார்கள். எனவே என்னைப்பற்றி வீணாக வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்று கொண்ட போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தி.மு.க. செய்த வேலை
அதன்பின்னர் நடிகர் செந்தில் கூறும்போது, திருச்சியில் இருந்து தான் இந்த தகவல் வெளிவந்தது. இது எனக்கு ஏற்பட்ட திருஷ்டி என நினைத்து அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் மறுபடியும் நான் இறந்து விட்டதாக தகவல்களை பரப்புகிறார்கள். இதனை தி.மு.க.வினர் தான் வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும். எனக்கு மதுரையிலும் வீடு இருப்பதால், இங்குள்ள போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்தேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.