Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

சக வீரர்களுடன் ஜாலியாக ‘பிளேஸ்டேசன்’ விளையாடிய டோனி


சக வீரர்களுடன் பிளேஸ்டேசன் விளையாடி ஜாலியாக பொழுதை கழித்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோனி.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜம்பாப்வே சென்றுள்ளது. கடந்த 15-ந்தேதியுடன் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றி ஜிம்பாப்வேயை ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இந்நிலையில் நாளை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது.

ஒருநாள் தொடரை இந்தியா எந்தவித சிரமமும் இன்றி எளிதாக வென்றது. இதனால் டோனி மிக சந்தோசத்தில் உள்ளார். இந்த சந்தோசத்துடன் சக வீரர்களுடன் சேர்ந்து ‘பிளேஸ்டேசன்’ விளையாட்டை டிவியில் விளையாடி உற்சாகமாக நேரத்தை செலவழித்துள்ளார்.

அப்போது, டோனி சக வீரர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து ‘ஸ்பெயின் VS அர்ஜென்டினா’ இடையிலான கால்பந்து போட்டியை விளையாடியுள்ளார். இந்த போட்டோவை டோனி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.