பாகிஸ்தானில் இன்று காலை மோட்டார் சைக்கிள் வந்த மர்ம மனிதர்கள் சட்டக்கல்லூரி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில், பலுசிஸ்தான் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி உள்ளது. அதன் முதல்வராக பணியாற்றி வந்தவர் அமானுல்லா அசாக்ஜாய். அவர் இன்று தனது காரில் இன்று கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த அமானுல்லா அசாக்ஜாய் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
உடனடியாக அமானுல்லா அசாக்ஜாய் மீட்கப்பட்டு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டார் என்று அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த செய்தி, காட்டுத்தீ போன்று வக்கீல்கள் மத்தியில் பரவியது. அவர்கள் பெருந்திரளாக மருத்துவமனையில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து கோர்ட்டுகளை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்-மந்திரி சனவுல்லா ஜெஹ்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை அளிக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பலியான அமானுல்லா அசாக்ஜாய் பலுசிஸ்தான் கவர்னர் மற்றும் பி.எம்.ஏ.பி. கட்சித் தலைவர் ஆகியோரின் மருமகன் ஆவார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.