Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய குவைத் மசூதி மீண்டும் திறப்பு


குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் பேர் திரண்டு, தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி அதி பயங்கர தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலின்போது 27 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 227 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடந்து ஓராண்டு ஆன நிலையில் அந்த மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

மசூதிக்குள் நீண்ட மர பலகைகளில் செதுக்கப்பட்ட திருக்குரான் வசனங்கள் மின்னுவதாகவும், தொழுகை நடத்த வருகிறவர்களுக்காக புதிய தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் அங்கு இன்னும் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடையே பதற்றம் நிலவுவதாகவும், அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.