Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

ஈ.எஸ்.பி.என். ‘உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் பட்டியல்’: கோலி, டோனி மட்டுமே கிரிக்கெட் வீரர்கள்


ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் கொண்ட பட்டியலில், கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் விராட் கோலி, டோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி. இவர் தனது கீப்பிங்காலும், ஹெலிகாப்டர் ஷாட்டாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

அதேபோல் டி20 போட்டியில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ஆஸ்திரேலியா, ஆசிய கோப்பை, உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இரண்டு பேரும் ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் புகழ்மிக்க 100 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி 8-வது இடத்தையும், டோனி 13-வது இடத்தையும் பிடித்துள்ளனர். பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரிவில் டோனி, கோலி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இது தவிர மூன்றாவது இந்தியராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 41-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தையும், அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் லிப்ரான் ஜேம்ஸ், மெஸ்சி, நெய்மர் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே 2 முதல் 5-வது இடங்களை பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.