புனேயில் தாயை கொலை செய்து, ஆண் குழந்தையை கடத்திய 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண் குழந்தை
புனே ஹடப்சர், வைத்வாடியை சேர்ந்தவர் ரகுநந்தன் தாகூர்(வயது28). இவரது மனைவி மது(22). இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில், மதுவுக்கு நிகிதா(30) என்ற பெண் அறிமுகமானார். அவர் தான் அங்கன்வாடியில் வேலை பார்த்து வருவதாக கூறினார்.
பிரசவித்த பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்குவதாக கூறிய அவர், அந்த தொகையை பெற தான் உதவுவதாக கூறி அடிக்கடி மதுவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 17–ந்தேதி லட்சுமி(19) என்ற இளம்பெண்ணுடன் நிகிதா மதுவின் வீட்டிற்கு வந்தார். அவர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வரும்படி குழந்தையுடன் மதுவை அழைத்து சென்றனர். அதன்பின்னர் தாய், சேய் இருவரும் வீடு திரும்பவில்லை.
தாய் கொலை
இதனால் கலக்கம் அடைந்த ரகுநந்தன் தாகூர் மனைவி, குழந்தையை தேடி அலைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் ஹடப்சர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சந்தேகத்தின்பேரில் நிகிதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது தோழிகளான லட்சுமி, சந்திரபாக்(35) மற்றும் ஆகாஷ் கிருஷ்ணா(19) என்ற வாலிபருடன் சேர்ந்து மதுவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும் போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:–
நிகிதா குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார். ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பிய ஒருவர், நிகிதாவிடம் ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இந்த சமயத்தில் தான் மதுவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிந்த நிகிதா, அங்கன்வாடி ஊழியர் போல் அறிமுகமாகி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.
குழந்தை கடத்தல்
அவரது சதி திட்டம் தெரியாமல் சம்பவத்தன்று மது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க நிகிதா அழைத்தார் என்பதற்காக அவருடன் ராம்தேக்கடி பகுதிக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது சதி திட்டத்திற்கு உடந்தையாக லட்சுமி, சந்திரபாக், ஆகாஷ் கிருஷ்ணா ஆகியோர் காத்திருந்தனர். மது குழந்தையுடன் சென்றதும் 4 பேரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் உடலை அங்குள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்தனர். பின்னர் நிகிதா கூறியதன் பேரில் குழந்தையை லட்சுமி, காலேபண்டல் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.
கைது
இதையடுத்து போலீசார் நிகிதா, சந்திரபாக் ஆகாஷ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் பூட்டிய வீட்டிற்குள் இருந்த மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காலேபண்டல் சென்று லட்சுமியை கைது செய்து குழந்தையையும் மீட்டனர்.
தாயை கொன்று குழந்தையை கடத்திய இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.