Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

கபாலி இனி ஆகாயத்தில் பறக்க இருக்கிறார்


கடல் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற ‘கபாலி’ தற்போது ஆகாயத்திலும் பறக்க இருக்கிறார்.


ரஜினி நடிப்பில் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் ‘கபாலி’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் சரித்திர சாதனை படைத்து வரும் நிலையில், இப்படத்திற்கு இன்னொரு மணிமகுடம் வைத்தாற்போன்று ஏர்-ஏசியா விமான நிறுவனமும் கைகோர்த்துள்ளது படத்தின் மீது மேலும் அதிக தாக்கத்தை உருவாக்கியுள்ளது.




சமீபத்தில் ‘கபாலி’ படத்தின் ஏர்-லைன் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா விமான நிறுவனம், தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தது. அதேபோல், புதிய புதிய திட்டங்களையும் அறிவித்து வந்தது. இந்நிலையில், ஏர்-ஏசியா நிறுவனத்தின் விமானம் ஒன்றில் ‘கபாலி’ படத்தின் விளம்பரத்தை அச்சடித்துள்ளனர்.



கடல் கடந்தும் ‘கபாலி’யின் புகழ் பரவி வரும் நிலையில், தற்போது ஆகாயத்திலும் ‘கபாலி’ புகழை நிலைநாட்டும் வகையில் ஏர்-ஏசியா நிறுவனம் இந்த படத்தின் விளம்பரங்களை தங்களது விமானத்தில் அச்சடித்துள்ளது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ‘கபாலி’ விளம்பரம் அச்சடிக்கப்பட்டுள்ள விமானத்தின் புகைப்படங்களை ஏர்-ஏசியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.