அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து போர்ட்லேண்ட் செல்லும் விமானத்தில் ஒரு சிறுமி பெற்றோர் துணையின்றி தனியாக பயணித்துள்ளார். அவரது அருகில் சாட் கேம்ப் (வயது 26) என்பவர் பயணித்து உள்ளார். சாட் கேம்ப்ல் அந்த சிறுமிக்கு தொடர்ந்து தொல்லை தர துவங்கியுள்ளார்.
அச்சிறுமி மீது சாய்ந்து கொண்டு அவரது தொடை மீது 3 முறை கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழங்கையால் அடிக்கடி சிறுமியை சீண்டவும் செய்துள்ளார்.
இதனிடையே விமான பணிப்பெண் ஒருவர் சிறுமியின் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர் கண்டு அதிர்ச்சியுற்று அந்த இளைஞனை வேறு இருக்கையில் அமரும்படி கேட்டுள்ளார்.
இதனையடுத்து ஒரேகான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசாரால் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டின் மீது குறிப்பிட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் பெற்றோர் விமான நிறுவனம் மீது உரிமையியல் வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அந்த விமான நிறுவனத்தின் கொள்கைப்படி, பெற்றோர் துணையில்லாத 5-17 வயதுடைய சிறுவர்களுக்கு பயண கட்டணத்தில் மேலதிகமாக 150 டாலர்கள் தரவேண்டும்.
பணம் அதிகம் பெற்றிருந்தும் தமது மகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அந்த நிறுவனம் தவறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் கைது செய்துள்ள கேம்ப் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.